அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளன.
அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன அந்த அழைப்பை நிராகரித்துள்ளன.
ஜனாதிபதி தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
Discussion about this post