எரிபொருள் நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டீசலை மக்களுக்கு விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
யாழ்ப்பாணம் மடத்தடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த டீசலே இவ்வாறு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆயினும் டீசல் மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை.
மறுநாள் அதிகாலை டீசல் நிரப்பச் சென்றவர்களுக்கு, டீசல் முடிவடைந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நேற்றுமுன்தினம் அங்கு திடீரென அதிகாரிகள் சோதனை நடத்தியபோதே, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அதை மக்களுக்கு விநியோகிக் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்கு நேற்று அறிக்கையிட்டுள்ளனர்.
Discussion about this post