யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள இரு ஆலயங்களில் நேற்றுமுன்தினம் இரவு உண்டியல் உடைத்துத் திருடப்பட்டதை சம்பவம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்துடன், வெளிநாட்டு நாணயக் குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமரா பதிவுகளைக் கொண்டே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடடிக்கைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post