கோண்டாவிலில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து நொருக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. வீட்டுக்குள் நுழைந்த 10 பேரைக் கொண்ட கும்பல் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post