கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயன்றுள்ளது என்று தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் நடந்துள்ளது.
வாகனத்தால் மோதப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட ஒருவரை வானகம் ஒன்றில் மூவர் ஏற்றி வந்துள்ளனர். காயத்துடன் காணப்பட்டவர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றபோது, வாகனத்தால் அந்த நபரை மோதியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
வாகனத்தால் மோதப்பட்டவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வாகனமும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோடினர் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
கனகபுரம் வீதியில் உள்ள மதுபான விடுதியில் இந்த நபர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது ஒரு கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post