யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செ.நிக்கொலஸ்பிள்ளை பிரதேச செயலர்களுக்கு அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு, ஒருங்கிணைப்புக்குழுவுக்கு பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட கீதநாத் காசிலிங்கம், யாழ். மாவட்டச் செயலரைக் கோரியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் கூட்டுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post