2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மாதக் கர்ப்பிணி ஒருவர் ஊர்காவற்றுறையில் கொடூரமாக அடிததுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதன்மைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றததுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்ட்டுள்ள ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினரான ஜெகதீஸ்வரன் என்பவரே ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முதன்மைச் சந்தேகநபராக முற்படுத்தப்பட்டார்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி பட்டப்பகலில் வீடு புகுந்து ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய ஞானசேகரன் ஹன்சிகா அடித்துப் படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் பணிக்குச் சென்றிருந்த சமயம் இந்தக் கொலை நடந்திருந்திருந்தது.
இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சகோதரர்களான இருவர் அன்றைய தினம் மண்டைதீவுச் சந்தியிலுள்ள பொலிஸ் காவலரணில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியான வாய்பேச முடியாத சிறுவன், அடையாள அணிவகுப்பில் அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியிருந்தார்.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 5 ஆண்டுகளாக சுருக்கமுறையற்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொலைச் சம்பவம் நடந்த 5 ஆண்டுகளின் பின்னர் முதன்மைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post