எரிபொருள்களின் விலைகளை உயர்த்துவதற்காக அரசாங்கம் எரிபொருள்களைக் கடந்த சில நாள்களாக மறைத்து வைத்திருந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித குற்றஞ்சாட்டியுள்ளார்.
20 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல், 7 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் மற்றும் 6 ஆயிரம் மெற்றிக்தொன் சுப்பர் பெற்றோல் என்வற்றை விநியோகிக்காது அரசாங்கம் மறைத்து வைத்திருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபட மாட்டார் என்று குறிப்பிட்டுள்ள அவர், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் கட்டணம் செலுத்தப்பட்ட 55 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருளுக்கு உண்மையாகவே தட்டுப்பாடு ஏற்படவில்லை, நாட்டுக்கு வந்த எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டிருந்தது என்று கூறியுள்ள ஆனந்த பாலித, அரசாங்கம் விலை அதிகரிக்கும் வரை அவற்றை விநியோகிக்காது தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post