தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழலில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும் என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கோரிக்கை் விடுத்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
உலக சந்தையில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கின்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், பெரும் நட்டத்துக்கு மத்தியிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி தீரும் என்று தெரிவித்த அமைச்சர் ஆடைக் கைத்தொழில்மூலம் வருமானம் வரத் தொடங்கியுள்ளது என்றும், சுற்றுலாத்துறை எழுச்சி கண்டு வருகின்றது என்றும் கூறினார்.
நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நல்லாட்சி அரசும் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post