கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் இம்முறை பெருவிழா நடத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post