எதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் நெட்டாங்கண்டல், உழவனேரியைச் சேர்ந்த தர்மலிங்கம் இளங்கோ (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கட்டுத் துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த அவர், மல்லாவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆயினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல் மல்லாவி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நெட்டாங்கண்டல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post