இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டுக் காரணமாக 3 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கடந்த பத்து நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டு காரணமாக நாட்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபையினரும், வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தபோதும், நாட்டின் பொருளாதார பாதிப்பைக் கருத்தில் கொண்டே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மின்சார உற்பத்திக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காததால் மின் உற்பத்தி நிலையங்கள் பல செயலிழந்ததை அடுத்தே மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மின்சாரத்தைத் துண்டிக்காது மாற்று வழிகள் ஊடாக மின்சாரத்தை வழங்கவே மின்சார சபை முயற்சித்து வருகின்றது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Discussion about this post