வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் படகு, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட படகை வெட்டிச் சோதனையிட்டபோது, படகில் வெடிபொருள்கள் நிரப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று இராணுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post