இந்தியாவில் பெற்ற குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்தேவ் கோஷ் – சதி தம்பதி.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதக் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில், திடீரென 8 மாத குழந்தை
காணாமல் போனதாக தம்பதி அக்கம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், சில தினங்களிலேயே அந்தத் தம்பதி மகிழ்ச்சியாகக் காணப்பட்டிருக்கிறார்கள். திடீரென அவர்களிடம்
ஐபோன்-14 இருந்திருக்கிறது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்தில் தம்பதி மீது சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு அளித்தனர்.
காவல்துறையினரும் உடனடியாக இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தகவல்கள்
வெளியாகின.
இது குறித்து பேசிய காவல்துறையினர், `தம்பதி, ஏழ்மையான நிலையிலேயே வாழ்வை நடத்தியிருக்கிறார்கள்.
இருவரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அதனால் ஐபோன் வாங்கத் திட்டமிட்டபோது மனைவி சதி, 8 மாதக் குழந்தையை விற்றுவிடலாம் எனக்
கூறியிருக்கிறார்.
அதற்கு அவரின் கணவர் ஜெய்தேவும் சம்மதம் தெரிவித்ததால், குழந்தையை விற்றிருக்கிறார்கள்” என கூறியுள்ளனர்.
மேலும், 7 வயது சிறுமியையும் அவர்கள் விற்பதற்கு முயன்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. குழந்தையின் தாயை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தந்தையையும் கைது செய்து குழந்தையை மீட்கும் பணியில்
காவல்துறை இறங்கியுள்ளது.
Discussion about this post