உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
தேசிய பாவனையாளர் புள்ளி விவரங்களின் பிரகாரம், மே மாதம் 58 சதவீதமாகவிருந்த உணவுப் பொருட் களின் விலையேற்றம், ஜூன் மாதத்தில் 75.8 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் ஜூலை மாதத்தில் 80 சதவீதமாக பதிவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்பதற்கு , உலக உணவுத் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 200 மெட்ரிக் தொன் அரிசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் உலகம் உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.
Discussion about this post