63 வயதுப் பெண் ஒருவரை வன்புணர முயன்ற குற்றச்சாட்டில் 15 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் பொன்னாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணை பற்றைக்காட்டுக்குள் கடத்திச் சென்ற சிறுவன், வன்புணர முயன்றான் என்றும், பெண் ஒருவாறு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மீன் வாங்கச் சென்று வீடு திரும்பிய பெண்ணை வீதியில் வழிமறித்த சிறுவன் பெண்ணின் உறவினர் ஒருவரின் பெயரைக் கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர் பெண்ணைச் சைக்கிளில் ஏற்றி வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறியுள்ளார்.
பற்றைக்காடு வழியாக சைக்கிள் செல்வதை அவதானித்த பெண், இது வீட்டுக்குச் செல்லும் பாதையல்ல என்று கூறியபோது, சிறுவன் இந்தவழியால் இலகுவில் வீட்டை அடையலாம் என்று கூறியுள்ளார்.
அடர்ந்த பற்றைக் காட்டுப் பகுதிக்குச் சென்றதும், பெண்ணை வன்புணர முயன்றுள்ளார். பெண் சமயோசிதமாகச் செயற்பட்டு, தனது சகோதரன் அங்கு வந்துள்ளார் என்று பெயரைக் கூறி சத்தமிட்டதும், சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்ற வாக்குமூலத்தில் தெரிவிககப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
Discussion about this post