60 வகையான மருந்துகளின் விலைகளை 40 வீதத்தால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மருந்துகளின் கட்டுப்பாட்டு விலைகள் மீதான ஒழங்கு விதிகள் இதன் மூலம் திருத்தப்படுகின்றன என்று அறிவிக்கப்ப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 75 மில்லிகிராம் அஸ்பிரின் மாத்திரை 7 ரூபா 8 சதமாகவும், 100 மில்லிகிராம் அஸ்பிரின் மாத்திரை 12 ரூபா 53 சதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயளர்கள் பயன்படுத்தும் இன்சுலின் ஊசி மருந்து உட்பட 60 வகை மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post