இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யபட்ட 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்
நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே சென்ற வருடம் டிசம்பரில்
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான
ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு பிற்போடபட்டது
மீனவர்களின் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருடதிற்குள்
மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் இவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன்
ஆணையிட்டார்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவ் வழக்கு தாக்கல் சியப்பட்ட நிலையில் இந்திய
மீனவர்கள் குற்றத்தைஏற்றுகொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு
திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும்
நீதவான் ஆணையிட்டார்
Discussion about this post