புதிய பயனர்களுக்கான தேசிய எரிபொருள் அமைப்புக்கான QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஏற்கனவே QR முறையில் பதிவுசெய்த பயனர்களுக்கு இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post