30 மணி நேரம் தாமதமாக வந்த விமானத்தால் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மிக அண்மையில் துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மணி நேர தாமதத்துக்கு பிறகே புறப்பட்டது.
அதன்படி விமானம் 30 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் பலரும் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறொரு நல்ல நாளில் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த மேலும் பலர் தாங்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
Discussion about this post