சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாததால் விலை அதிகரிப்பு ஏற்படாது என்றும், அதன் விலை முந்தைய பெறுமதியிலேயே இருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்தநிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு இடம்பெறாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை, தற்போதுள்ள சூழ்நிலையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நட்டத்தின் மத்தியிலேயே எரிவாயு சந்தைக்கு வழங்கப்படுகின்றது என்றும், இந்த நிலைமை தொடர்ந்தால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை தோன்றும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது விலை அதிகரிப்புக்கு மறுத்தாலும் இன்னும் சில நாள்களில் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post