ஏழாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டில் இருந்து சலடமாக மீட்கப்பட்டுள்ளார். சசிக்குமார் லக்சன் என்ற 25 வயது இளைஞரே உயிரிழந்தவராவார்.
வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வீடியோ அழைப்பு எடுத்த நிலையில் தூக்கிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறப்பு விசாரணைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமாரால் முன்னெடுக்கப்பட்டது.
Discussion about this post