பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன நடந்தது என்று விசாரணைகளின் போக்கில் அறியவரும். அதற்கு பின்னர் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயலாம் என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கட்டளை வழங்கினார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.
பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மேலதிக நீதிவான், நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு குறிப்பிட்டு சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post