காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகையில்,
“காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இல்லை, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று நாள் மோதலில் இரு தரப்பிலும் 1,100 பேர் பலி
காசாவின் வான்வெளியை, கரையோரபகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
இந்நிலையில் காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டுசெல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது .
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மூன்று நாள் மோதலில் இரு தரப்பிலும் 1,100 பேர் கொல்லப்பட்டனர், இஸ்ரேலில் 44 வீரர்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை போரை அறிவித்தது, பயங்கரவாதக் குழுவின் மறைவிடங்களை அழிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்தார்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இடைவிடாத இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கிய காசாவில், அதிகாரிகள் குறைந்தது 493 இறப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post