தமிழகத்தின் கடலூரின் உணவகமொன்று 10 ரூபாய்க்கு கோழி பிரியாணியை விற்பனை செய்துவரும் நிலையில் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகின்றது.
கடலூர் மாவட்டம், புது குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரே தனது உணவகத்தில் இவ்வாறு 10 ரூபாய்க்கு பிரியாணியை விற்பனை செய்து வருகின்றார்.
மக்கள் உணவகத்தை நோக்கி படையெடுப்பதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ரமேஷ்,
நான் சென்னையில் பிரபல நட்சத்திர உணவகமொன்றில் பணிபுரிந்தேன். அங்கிருந்து எனது சொந்த ஊரான கடலூருக்கு வந்து இந்த பிரியாணிக் கடையை ஆரம்பித்துள்ளேன். தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களை சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர்.
இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே கடையைத் திறந்த முதல் நாளே பத்து ரூபாய்க்கு கோழி பிரியாணி வழங்கினேன் இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post