தற்போது 1.8 பில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதுள்ள டொலர் கையிருப்பில் இருந்து பயன்படுத்தக்கூடிய தொகை 300 மில்லியன் டொலர் மட்டுமேயாகும். இன்று எம்மிடம் உள்ள டொலர் கையிருப்பு 1.8 பில்லியன் டொலராகும்.
2018 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 925 மில்லியன் டொலராக இருந்த சுற்றுலா வருமானம் 2021 ஆம் ஆண்டில் 682 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
அத்துடன் இந்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரையில் சுற்றுலா வருமானம் 893 மில்லியன் டொலரை எட்டியுள்ளது என்றார்.
Discussion about this post