3 வயது குழந்தை ஒன்று முடிக்கு பயன்படுத்தும் ஹேர் கிளிப் ஒன்றினை விழுங்கிய நிலையில், அறுவை சிகிச்சை
இல்லாமல் மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
இந்தியா- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் கீதா தம்பதியினர். கூலி
வேலை பார்த்து வரும் இவருக்கு சஞ்சனா என்ற 3 வயதில் குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றினை விழுங்கியுள்ளது. உடனே சிறிது நேரத்தில் வாந்தியும் எடுத்துள்ளது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், ஹேர் கிளிப் இரைப்பையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன் அறுவை சிகிச்சை இன்றி என்டோஸ் கோபி மூலம், எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் ஹேர் கிளிப்பை பத்து நிமிடத்தில் அகற்றியுள்ளனர்.
Discussion about this post