யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக தாவடி தெற்குப் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 80 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நீண்ட காலமாக உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், வீட்டில் வைத்தும் வியாபார நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரிகளுடன் இவர் நீண்ட காலமாக தொடர்பைப் பேணி வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கைதான சந்தேகநபருக்கு உரிய சிகிச்சையளித்து சமூகமயப்படுத்தித் தருமாறு சந்தேகநபரின் தாயார் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post