ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடட குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன், ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோப்பாய் செல்வபுரத்தில் 4 கிராம் 200 கிராம் ஹெரோய்னுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு முருகன் கோயிலடியைச் சேர்ந்த நால்வா் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 வயதுடைய ஒருவரிடம் 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னும், மற்றொருவரிடம் இருந்து 96 போதை மாத்திரைகளும், ஏனைய இருவரிடம் இருந்து 15 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் ஐவரும் போதைப்பொருள் விற்பனையால் நாளாந்தம் ஒரு லட்சம் ரூபா சம்பாதித்துள்ளனர். இவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரிடம் டீல் பேசித் தம்மை விடுவிக்க முற்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post