ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலன்னறுவை, புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 ஹெரோய்ன் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post