அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ள தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிரணி பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவருமான லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி., நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
அதேவேளை, கட்சியின் தீர்மானத்தைமீறியே நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சு பதவியை ஏற்றுள்ளார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Discussion about this post