ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டரேட் நகரில் வசிக்கும் அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து சென்று விட்டனர்.
இதனால் அந்நகரம் ஆளரவமற்று வெறிச்சோடிப்போய் காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவுக்கு மிக அருகில் அந்நகரம் அமைந்துள்ளதால், ஹமாஸ் அமைப்பினர் ரொக்கெட் தாக்குதலை நடத்தும் ஆபத்து உள்ளதாக இஸ்ரேல் படையினர் தெரிவித்திருந்தனர்.
எனவே அந்த நகரத்திலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து வீடுகள், வாகனங்கள், உடமைகளை அப்படியே விட்டுவிட்டு மக்கள் சென்றதால் தெருக்கள் அனைத்திலும் மயான அமைதி நிலவுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வந்த பிற்பாடே மக்கள் ஊர் திரும்புவார்கள் என்று கருதப்படுகிறது.
Discussion about this post