முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராபதவி விலகியவுடன் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்பும் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர்.
நாடு எதிர்நோக்கியிருக்கும் கடுமையான நெருக்கடியில் ”ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என மக்கள் போராடினார்கள்.
ஜனாதிபதி பதவி விலகும் வரை வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாட்டிற்கு நாங்கள் பணம் அனுப்ப மாட்டோம் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகியவுடன் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இதனால் இலங்கையில் டொலரின் கையிருப்பு மெதுவாக அதிகரித்து வர ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் இந்த செயல் பலரால் பாராட்டப்பட்டுள்ளது.இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Discussion about this post