இந்த வருடத்தின் கடந்த 6 மாத காலப்பகுதியில் இலங்கையில் இருந்து சுமார் ஆயிரத்து 500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அவர் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் இலங்கை மருத்துவ சபையால் “நல்ல நிலைப்பாட்டுக்கான சான்றிதழ்” பெறுவதற்காக ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியால் மருத்துவத்துறையும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இந்தநிலையில் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post