வெறொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவனை புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்தை அவரது மனைவிக்கு போக்குவரத்து துறையே அனுப்பிவைத்துள்ளது. இதனால், கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கு திருமணமாகி மனைவியுள்ளார்.
இதனிடையே, கடந்த 25-ம் திகதி அவர் திருவனந்தபுரம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த நபருடன் வெறொரு பெண்ணும் பயணித்துள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க ஏதுவாக அந்த சாலையில்
போக்குவரத்து துறை சார்பில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், ஹெல்மெட் அணியாமல்
ஸ்கூட்டரில் வந்த அந்த நபர் மற்றும் அவருக்கு பின்னாள் இருந்த பெண் சிக்கியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல்
அவரும் அவருக்கு பின்ன்னாள் இருந்த பெண்ணும் பயணிப்பதை கண்காணிப்பு கேமரா துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளது.
இதனையடுத்து இந்த புகைப்படங்கள் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மனைவியின் தொலைபேசி எண்ணிற்கு
அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப்புகைப்படத்தைப் பார்த்த மனைவி, மோட்டார் சைக்கிளில் வந்த பெண் குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.
அந்த பெண் தன் தோழி தான் என்றும் அவர் லிப்ட் கேட்டதால் அவரை ஸ்கூட்டரில் ஏற்றிகொண்டு சென்றதாகவும்,
அந்த பெண்ணுக்கும் தனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், கணவனின் விளக்கத்தை மனைவி ஏற்கமறுத்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை அந்த கணவர் தாக்கியுள்ளார். மேலும் தனது 3 வயது குழந்தையையும் அவர் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, கணவன் தாக்கியதில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பொலீஸ் நிலையம் சென்று கணவன் மீது
முறைப்பாடு அளித்தார். அந்த பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் கணவரை
கைது செய்தனர். ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து துறை புகைப்படத்துடன் அனுப்பிய மெசேஜால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு அது கைது வரை நீடித்துள்ளது.
Discussion about this post