வெடிமருந்து கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் பளை, இத்தாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கைவிடப்பட்ட வெடிபொருள்களைச் சேகரித்து கிறைண்டரால் வெட்டியபோது அது வெடித்து உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவம் கடந்த டிசெம்பர் மாதம் நடந்தது.
அந்த இளைஞர், இத்தாவிலைச் சேர்ந்த ஒருவரின் அறிவுத்தலின்பேரிலேயே வெடிபொருள்களைச் சேகரித்து வெட்டி வெடிமருந்தை விற்பனை செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்டார் என்று கூறப்படுகின்றது.
இத்தாவிலைச் சேர்ந்த அந்த நபர், வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post