விளையாடச் சென்ற 8 வயதுச் சிறுவன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறை, துன்னாலை குடவத்தையில் நேற்று நடந்துள்ளது.
மயூரன் மகிந்தன் என்ற 8 வயதுச் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவன் வீட்டுக்கு அருகே உள்ள கோயில் பகுதிகளில் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
அதை அவதானித்த அங்கிருந்த சிலர், சிறுவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
ஆயினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post