Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

June 21, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கெப்டன் விராட் கோலி. இவருக்கு இப்போது 34 வயதாகிறது. இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் வாமிகா என்ற பொண் குழந்தையும் உள்ளார்.

விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 இலட்சமும் ஒரு நாள் போட்டிக்கு 6 இலட்சமும் டி20 போட்டிக்கு 3 இலட்சமும் சம்பாதிக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் இந்தியன் சூப்பர் லீக் கிளப் எப்சி, டென்னிஸ் டீம், மல்யுத்த சார்பு அணி என்பவற்றிக்கும் உரிமையாளராக இருக்கிறார் இதிலும் அவருக்கு வருமானம் வந்துக் கொண்டிருக்கிறது.

மேலும், ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கெப்டனாகவும் இருக்கிறார் அதில் அவர் ஆண்டிற்கு 15 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

இதை தவிர விளம்பரங்களிலும் நடித்து சம்பாதிக்கிறார் அதில் அவர் ஒரு விளம்பர படத்திற்கு 7.5 கோடியிலிருந்து 10 கோடி வரைக்கும் சம்பாதிக்கிறார்.

அதிலும் 18இற்கும் அதிகமான ப்ராண்டுகளுக்கும் மொத்தமாக 175 கோடி ரூபாயும் கிடைக்கும். இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 8.9 கோடி ரூபாவும் டுவிட்டர் பதிவிற்கு 2.5 கோடியும் சம்பாதிக்கிறார்.

இதை தவிர மும்பையில் 34 கோடிக்கு மதிப்பிலான வீடும், குர்கானில் 80 கோடி மதிப்பில் இன்னொரு வீடும் இருக்கிறதாம் மேலும், சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.

இவை எல்லாம் சேர்த்து மொத்தமாக விராட் கோலியின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 கோடிக்கும் அதிகமாக செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.

Tags: #CricketTeam#IndianCricketTeam#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#ViratKohliindia
Previous Post

கனடாவில் இந்தப் பகுதியில் அவசர கால நிலை

Next Post

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 5 மாதங்களில் ஆயிரம் பேர் உயிரிழப்பு

Next Post
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 5 மாதங்களில் ஆயிரம் பேர் உயிரிழப்பு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 5 மாதங்களில் ஆயிரம் பேர் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.