இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதையடுத்து சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல கடந்த 27ஆம் திகதி தீர்ப்பளித்தார்.
தண்டனைக்கு எதிராக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ள நிலையில், சட்டத்தரணிகள் பிணை கோரி விண்ணப்பித்திருந்தனர். பிணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிணை அனுமதி வழங்கப்பட்டது.
Discussion about this post