இஸ்ரோவினால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இடத்தில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய காணொளியை இஸ்ரோ தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதற்காக நேற்றைய தினம் (26-08-2023) காலை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, சந்திரயான் 3 திட்ட பணிப்பாளரான தமிழகத்தின் விஞ்ஞானி வீரமுத்துவேலை சந்தித்து கலந்துரையாடியதுடன் சந்திரயான் 3 மாதிரியை நரேந்திர மோடி நினைவுப் பரிசாக பெற்றுக்கொண்டார்.
Discussion about this post