நாணய மாற்று வீதம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் மே – ஜூன் மாதத்துக்குள் அமெரிக்க டொலர் 400 ரூபாவைத் தாண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, டொலர் கட்டுப்பாட்டை இழந்ததன் பின்னர் 300 ரூபாவாக இப்போது அதிகரித்துள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் வாழ்க்கைச் செலவு தவிர்க்க முடியாத அளவுக்கு உயரும். ஜூன் மாதத்துக்குள் டொலர் 400 ரூபாவை எட்டும் என்பதே எனது கணிப்பாகும் என்றார்.
Discussion about this post