வார இறுதி நாள்களில் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டின் நேரத்தைக் குறைப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
நீர் மின் உற்பத்தியின் அதிகரிப்பு மற்றும் குறைந்த எரிசக்தித் தேவை என்பவற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் மின்வெட்டு நேரத்தைக் குறைந்தபட்சமாக வைத்திருப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post