சிறிலங்கா முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு கிடைக்கவில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன சிறிலங்காவின் அந்நியச் செலாவணியில் கணிசமான பங்கு வகின்றன. ஆயினும் அவை சிறிலங்காவுக்கு ஆதரவு காட்டவில்லை.
ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பது பொதுவான மரபாகக் காணப்பட்டபோதும், இம்முறை இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஏன் இவ்வாறு நட க்கின்றது என்று நாம் சிந்திக்க வேண்டும். ஆணித்தரமான வாக்குறுதிகளை நாம் இலகுவாகவழங்கிவிட்டு, பின்னர் அவற்றை மீறுவதே அதற்கு முக்கியமான காரணமாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் நாட்டின் சார்பாக வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், அது செயற்படுத்தப்படவில்லை என்றார்.
Discussion about this post