வவுனியா-நொச்சிமோட்டையில் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர், தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதேதிசையில் பயணித்த கார் இவர்களது மோட்டார் சைக்கிளை மோதியதில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தை வைத்துக் காரைக் கைப்பற்றியுள்ளனர்.
Discussion about this post