வவுனியா, கள்ளிக்குளத்தில் உள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டள்ளது.
அங்கு புதிதாகப் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணங்களே தீப்பற்றி எரிந்துள்ளன.
வவுனியா நகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்தியபோதும், உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post