வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவு 21 வயது யுவதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி, சிவா நகரைச் சேர்ந்த து.பிரமிளா என்ற 21 வயது யுவதியே உயிரிழந்தவராவார்.

வீட்டுக்குள் இருந்த யுவதி வீட்டுக்கு வெளியே வந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இடியன் துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
காதல் விவகாரமே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் பொலிஸார் அதை உறுதிப்படுத்தவில்லை.
விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
Discussion about this post