சுகவீனம் காரணமாக வவுனியா பூவரசன்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 17 வயதுச் சிறுமி கர்ப்பமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் கணவர் கைவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்திருந்தார். தற்போது தாய் மத்திய கிழக்கு நாட்டுக்கு வேலைக்காகச் சென்றுள்ள நிலையில், இரு பிள்ளைகளும் சிறிய தந்தையுடன் (இரண்டாவது கணவர்) வசித்து வந்துள்ளனர்.
17 வயதுச் சிறுமி உடல் நிலை சுகவீனமுற்ற நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைகளில் சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதைடுத்து இந்த விடமயம் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
பூவரசன்குளம் பொலிஸார் சிறுமியிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை (தாயின் இரண்டாவது கணவர்) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post