பொருண்மியம் நலிந்த கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித்தாய்மார்களுக்கு அதிகமாக குருதிச்சோகை ஏற்படுகின்றது என்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். மகேந்திந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பின்தங்கிய பகுதிகளில் பொதுவாக போசாக்கு பிரச்சினைகள் நீண்டகாலமாகக் காணப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்பாக இருந்த காலப்பகுதியிலும் கூட பொருண்மியம் நலிந்த கிராமங்களில் வசிக்கும் தாய்மார்களே குருதிச்சோகையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சுகாதாரத் திணைக்களம் ஊடாக உரிய குருதிப்பரிசோதனையை மேற்கொண்டு அவ்வாறான அறிகுறிகளை கொண்ட தாய்மார்களுக்கு மேலதிக கவனமெடுத்து அதற்கான மாத்திரைகள் வழங்குவதுடன் ஏனைய விடயங்களும் வழங்கப்படுகின்றன.
அது குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சில பிரச்சினைகளை முடிந்தவரை தவிர்ப்பதற்கு உதவும். இதேவேளை குழந்தை சரியான நிறையுடன் பிறப்பதற்கும் தாய்மார்களின் போசாக்கு முக்கிய காரணியாகவுள்ளது. இந்த பாதிப்பு சில காலங்களுக்கு நீடிக்கும் நிலையே உள்ளது எனவும் தெரிவித்தார்.
Discussion about this post