அச்சுவேலி, வல்லைச்சந்திக்கு அருகில் இன்று மதியம் வயதான தம்பதியைத் தள்ளி வீழ்த்தி 9 பவுண் தாலிக் கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கறுப்பு நில பல்சர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.
வயதான தம்பதியினர் நெல்லியடியில் நடந்த நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மானிப்பாயில் உள்ள வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த வழிப்பறி நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வல்லைப் பகுதியில் அண்மைய நாள்களாக வழிப்பறிக் கொள்ளைகள் அதிகரித்துள்ளன என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Discussion about this post