இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வற் வரியை 8 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. அந்த முடிவு தவறானது.
அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அடுத்த 8 மாதங்களுக்கு குறைந்தது 4 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளது.
வரிகளை அதிகரிப்பதற்கான தீர்மானம் இலகுவானது அல்ல. ஆனால் இலங்கையின் பொருளாதாரம் தற்போது இக்கட்டான நிலைமையில் உள்ளது.
தற்போதைய 8 சதவீத வற் வரி வருமானம் நாட்டுக்கு உகந்தது அல்ல என்பது எனது கருத்து. இது குறைந்தது 13 அல்லது 14 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.
கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் எடுக்கப்பட்ட வரிகளைக் குறைக்கும் தீர்மானம், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தவறான முடிவு.
தற்போதைய பொருளாதார செயற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால், அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தைச் சர்வதேச கடன் மீளச் செலுத்தும் நிலைமைக்குக் கொண்டு வரமுடியும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post